fbpx
Connect with us

Cinemapettai

பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் நாக்க முக்கா ஜோடி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சுனைனா மற்றும் நகுல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

நகுல் மற்றும் சுனைனா இருவரும் முதன் முதலில் ஜோடியான திரைப்படம் காதலில் விழுந்தேன். சைக்கோ த்ரில்லர் ஆன இந்த படத்தில் பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. விஜய் ஆண்டனி இசையமைத்து இந்த படத்தில் நாக்குமுக்கா என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது அனைவரும் அறிந்ததே.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் மாசிலாமணி என்ற படத்தில் நடித்து இருந்தனர். கமர்சியல் அம்சத்தில் உருவாகியிருந்த இந்த படம் சொல்லக்கூடிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு இருவரும் ஜோடி சேரவில்லை.

மாசிலாமணி படத்திற்கு பிறகு சுனைனா மற்றும் நகுல் ஆகிய இருவருக்குமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் அமையவில்லை. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top