புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பேப்பர் கப்பலில் பொக்கே அனுப்பிய விஜய் டிவி ஜோடி.. ஒரே மியூசிக்கை வச்சு மொக்கை போடுறீங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2  சீரியலில் நடித்து வருபவர் மிர்ச்சி செந்தில். இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். அந்த சீரியலில் தன்னுடன்  மீனாட்சியாக நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின் ஸ்ரீஜா எந்த சீரியலிலும் நடிக்க வில்லை. இந்நிலையில் செந்தில் தன்னுடைய பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் என் பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி. இதுதான் என் பிறந்தநாள் டிரஸ். இந்த உடை என் மனைவி எனக்காக வாங்கியது நன்றாக இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார். ஆரஞ்சு வண்ண குர்த்தி மற்றும் ஜரிகை போட்ட வேட்டியில் செந்தில் மிகவும் அழகாக உள்ளார்.

ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து மிகவும் அழகான ஜோடி என்று புகழ்ந்து வருகின்றனர். செந்தில் தன் யூடியூப் சேனலில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஸ்ரீஜாவின் சொந்த ஊரான கேரளாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீஜா தன் கையால் பிளவர் போட்  ஒன்றை செய்துள்ளார்.

அதில் பிறந்தநாள் வாழ்த்து எழுதி வீட்டுக்கு வெளியில் ஓடும் மழைநீரில் அந்த போட்டை விடுகிறார். அது தண்ணீரில் மிதந்து செந்திலிடம் செல்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

Trending News