தூள், கில்லி உள்பட பல தமிழ்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் மயில்சாமி. தன்னுடைய உடல் அசைவுகள், முக பாவங்கள், பல குரல்களில் பேசி காமெடி மூலம் ரசிகர்களிடம் தனியாக இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் தனக்கு பிடித்த தலைவர் குறித்து பிரபல தொலைக்காட்சியில் மயில்சாமி மனம் திறந்து பேசியுள்ளார். நான் இதுவரை தலைவனாக ஏற்றுக்கொண்ட மாமனிதர் என்றால் அவர் அப்துல்கலாம்  ஒருவர் மட்டும் தான்.

நிகழ்ச்சியில் அவரைப்பற்றி பேசிக்கொண்டியிருந்த நடிகர் மயில்சாமி, அப்துல் கலாம் பெரிய பதவிகளை வகித்த மனிதர். அவர் இறக்கும் போது அவரது பேங்க் கணக்கில் வெறும் 2500 ரூபாய் தான் இருந்தது என கேள்விப்பட்டு இருந்தேன் என அவர் சொல்லும்போதே மற்ற வார்த்தை பேச முடியால் வாய் விட்டு அழுதார்.

இதன் காரணமாக தொலைக்காட்சியில் சிறிது நேரம் கழித்து அவர் சமாதானம் ஆன பிறகு நிகழ்ச்சியை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மயில்சாமி அடிக்கடி சமூக சேவை செய்து வருகிறார்.இவரின் உணர்வுபூர்மான செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here