மாகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் அளவு 30.92 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. நகரத்தில் உள்ள நான்கு நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மும்பை நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை பேரிடர் மேலாண்மை படையுடன் இணைந்து எதிர் கொள்ள இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வந்த விக்ரம் வேதா படத்திற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. தற்போது கூட ட்விட்டரில் அவரது ரசிகர்கள் விக்ரம் ரோல் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.madhavan

தற்போது மும்பையில் இருக்கும் மாதவன் கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். இடுப்பளவு தண்ணீர் உள்ளதால் .கனமழையால் நகரின் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை வெள்ளத்தில் நடிகர் மாதவன் சிக்கி இருக்கிறார்.

மழையில் சென்ற மாதவனின் கார் நடுரோட்டில் பழுது ஏற்பட்டு நின்று விட்டது.அதனால் அவர் அங்கிருந்து இறங்கி தண்ணீரில் நடந்து சென்றுள்ளார். எப்படி இந்த மழை நீரை கடந்து வீட்டிற்கு செல்வேன் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.