Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
உருகி உருகி காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்.. வருத்தத்தில் பிரபல நடிகர்
பிரபல நடிகரின் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்ய இருக்கும் செய்தி கேட்டு மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம் அந்த முன்னணி நடிகர்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோ என்றால் முதலில் இருப்பவர் அந்த உயரமான நடிகர்தான். நடிக்கும் வேலையை மட்டும் பார்த்திருந்தால் நல்ல பெயர் கிடைத்திருக்கும்.
ஆனால் பேராசை பெருநஷ்டம் என்பதற்கு ஏற்ப சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்.
இது ஒருபுறமிருக்க சமீப காலமாக அந்த உயரமான நடிகரின் படங்களும் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.
ஏற்கனவே ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அந்த உயரமான ஹீரோவுக்கு மேலும் ஒரு சோகமான அவரது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளாராம்.
தன்னுடைய நண்பர் வட்டாரங்கள் அனைவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அந்த நடிகரும் காதலில் விழுந்து சமீபத்தில் ஒரு தொழிலதிபர் மகளை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டார்.
ஆனால் வேறு ஒரு இளம் நடிகையுடன் அந்த நடிகருக்கு இருக்கும் தொடர்பை அறிந்த அந்த காதலி, காதலும் வேண்டாம் கத்திரிக்காய் வேண்டாம் என ஓரம் கட்டிவிட்டாராம்.
எப்படியாவது சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்ளலாம் என நடிகர் நினைத்திருந்த நேரத்தில் வேறு ஒரு தொழிலதிபர் மகனை திருமணம் செய்து கொள்ள ஓகே சொல்லிவிட்டாராம் அந்த காதலி.
