Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தில் விஜய்யின் கேரக்டர் இதான்! லீக் செய்த நடிகர்
Published on
தீபாவளிக்கு வெளிவரும் சர்க்கார் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அதில் அரசியல் பஞ்சு நிறைய இருக்கிறதாம். சர்க்கார் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி படத்தை பற்றி பேசியுள்ளார்.
விஜய் இப்பொழுது ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார் அளவில் இருக்கிறார் இயக்குனர் எல்லாம் அதற்கு தகுந்தாற்போல் கதையை தயார் செய்து வைத்துள்ளனர். என்னை பொறுத்தவரையில் விஜய் இப்போது காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடிக்க முடியாத காரியம். ஏனென்றால் ரசிகர்களும் அதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது விஜய் ரஜினியை போன்று இருக்கிறார்.
சர்க்கார் படத்தில் விஜய் Mask of the zorro படத்தில் வரும் சூப்பர் ஹீரோ மாதிரி நடித்திருக்கிறார். மக்களுக்காக பணிபுரிபவர், மக்களுக்காக ஒரு அங்கீகாரமாக விஜய் படத்தில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
