Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் சினிமாவில் தோல்வியடைந்த மற்றொரு வாரிசு நடிகர்.. நடித்ததிலேயே ஒரு படம்தான் ஹிட்டு!
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாக இருந்தபோதிலும் நிலைத்து நின்றவர்கள் என்றால் அது கம்மிதான். அந்த வகையில் விஜய், சூர்யா, கார்த்தி என குறிப்பிட்டு சொல்லும் சில நடிகர்களே நிலைத்து நின்று இருக்கின்றனர்.
தோல்வியுற்ற வாரிசு நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி சமீபகாலமாக ஹீரோ வாய்ப்பு இல்லாமல் வில்லனாக கிடைத்த சம்பளத்திற்கு நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா.
ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த கழுகு படம் மட்டுமே இவரது சினிமா சரித்திரத்தில் வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் போன்ற படங்கள் கொஞ்சம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.
அதன் பிறகு ஒரு படம் கூட சொல்லிக் கொள்ளும் நிலைமையில் இல்லை. இவர் பிரபல இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து ஹிட் கொடுத்த விஷ்ணுவர்தன் இவரை வைத்து யட்சன் என்ற படத்தை இயக்கிய தோல்வியை சந்தித்தார்.
வாரிசு நடிகர்களுக்கு சினிமாவில் ஈஸியாக வாய்ப்பு கிடைத்தாலும் நிலைத்து நிற்க கண்டிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் உழைக்க வேண்டும். அதில் இவரும் தோல்வியுற்று தற்போது வில்லனாக நடித்து வருகிறார். முற்றிலும் கதை தேர்வில் சொதப்பி தான் இவர் இந்த நிலைமைக்கு வந்துள்ளார்.
பெரிய அளவு ஹிட் படங்களை கொடுத்து பெரிய ஹீரோவாக வலம் வராத இவரை அவ்வளவு அதிகம் ஞாபகம் வைத்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் நன்றாக வர வேண்டிய பையன் தான்.
ஆனால் வயது 42 கடந்த நிலையில் இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன என்ற கணக்கில்தான் சென்றுகொண்டிருக்கிறது இவரது சினிமா நிலைமை.
