தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் கட்டிப்போட்டு லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நடிகை நயன்தாரா மீது அவர் நடித்த நானும் ரௌடிதான் படத்தில் நடித்த ராகுல் தாத்தாவுக்கு காதல் வந்துள்ளது.

இந்நிலையில் அவர் எழுதிய, கண்ணே நயன்… நீதான் என் குயின்… நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்… I Know நீ ஒரு lady lion… ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain… உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்… அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்… காதுமா…என் Face ஆயிடுச்சு Shine…நீதான் என் ஹீரோயின்… இப்படிக்கு… ராகுல் தாத்தா… என்னும் கடிதம் இணையத்தில் வைரலாக பரவியது.

இதனையடுத்து பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகை நயன்தாராவையும், ராகுல் தாத்தாவையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் ராகுல் தாத்தா நயன்தாராவிடம் தான் எழுதிய அந்த காதல் கடிதத்தை படித்துக்காட்டி அவரது கையில் முத்தம் கொடுத்து நயன்தாராவுடன் நடனம் ஆடுகிறார். இதன் புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவுகிறது.

Nayanthara_Take_Risk