தமிழ் சினிமாவே தளபதி விஜய்யை தான் தற்போதைய நம்பியிருக்கும் நிலையில் அவரது படத்தில் நடித்தது தப்பா போச்சே என 28 வயது நடிகர் போகிற இடமெல்லாம் புலம்பும் செய்திதான் விஜய் வட்டாரங்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
விஜய் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஒரு காலத்தில் நடிகர்கள் ஏங்கியதுண்டு. ஆனால் தற்போதெல்லாம் கதை அப்படியே மாறி விட்டது. விஜய் படங்களில் விஜய்யை தவிர மற்ற யாருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
இதன் காரணமாகவே பலரும் விஜய் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். அதுவும் நடிகைகள் கதை என்றால் சொல்லவே வேண்டாம். படத்தில் மொத்தமே அவர்களுக்கு நான்கு காட்சிகள் தான். ஆனால் எப்படியோ விஜய் சேதுபதி மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
அதேபோல் விஜய் படங்களில் நடித்தால் பெரிய அளவு சினிமாவில் இடம் கிடைக்கும் என நம்பி அட்லீ இயக்கிய பிகில் படத்தில் முக்கியத்துவம் இல்லாத மொக்கையான வேடத்தில் நடித்திருந்தார் நடிகர் கதிர்.

அதற்கு முன்னர் தான் பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைத்திருந்தார். பிகில் படத்தில் கதிர் கதாபாத்திரத்தை பார்த்து வந்த ஒரே கமெண்ட், இவரா பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தது என்பது தான்.
பிகில் படத்திற்கு பிறகு கதிர் சினிமா மார்க்கெட் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. அவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இதனால் மீண்டும் பரியேறும் பெருமாள் போன்ற படம் கிடைக்காதா என பரிதாபமாய் தவிர்த்து வருகிறாராம்.