Tamil Nadu | தமிழ் நாடு
திருநீறு விவகாரம்.. அரசியல் பிரமுகரை பகிரங்கமாக மன்னிப்பு கேட்கச் சொன்ன நடிகர் கருணாஸ்!
தமிழகத்தில் அக்டோபர் 30ஆம் தேதி அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திருநீர் பூச மறுத்ததால், சட்டமன்ற உறுப்பினரும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ் பெரும் எதிர்ப்பை தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்டாலின் திமுக கட்சியின் தாய் கழகமான திராவிடர் கட்சியின் பெரும் தலைவரான பெரியார் போற்றிய முத்துராமலிங்கத் தேவரை அவமதித்துவிட்டார்.
ஏனென்றால் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின், புனிதமான குல்லாவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் திருநீரை மட்டும் உதாசீனப்படுத்தியது முத்துராமலிங்க தேவரை இழிவுபடுத்தியதற்கு சமமாகும்.
எனவே இந்த சம்பவத்திற்காக ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தமிழகம் முழுவதும் முக்குலத்தோர் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கடும் கோபத்துடன் எதிர்க்கட்சித் தலைவரை சாடினார்.
அதன்பின் ‘நீங்கள் வரும் தேர்தலில் கூட்டணிக் கட்சியாக யாருடன் இணைவார்கள்?’ என்ற கேள்விக்கு ‘இடம் கொடுக்காமல் எப்படி ஆதரிக்க முடியும்?’ என்று பதிலளித்தார்.
எனவே நடிகர் கருணாசின் இந்த பகிரங்க குற்றச்சாட்டால் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
