fbpx
Connect with us

தஞ்சை விவசாயிக்கு பணம் அனுப்பி உதவிய நடிகர் கருணாகரன்

தஞ்சை விவசாயிக்கு பணம் அனுப்பி உதவிய நடிகர் கருணாகரன்

actor-karunakaranதஞ்சை மாவட்டம், பாப்பாநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன், மகேந்திரா கோட்டாக் நிறுவனத்தில் கடனில் டிராக்டர் வாங்கியுள்ளார். நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக டிராக்டர் கடன் நிறுவன ஊழியர்களும், காவல்துறையினரும் சேர்ந்து விவசாயி பாலனிடமிருந்து டிராக்டரை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்துள்ளனர்.

டிராக்டரை பாலன் தர மறுத்ததால் காவல்துறையினரும், கடன் நிறுவன ஊழியர்களும் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இச்சம்பவத்தை அங்குள்ள பொதுமக்கள் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பினார்கள். இது  தமிழ்நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்த நடிகர் விஷால், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே  நடிகர் கருணாகரன் கடந்த ஆண்டு அவர் ஒரு புது முடிவு எடுத்திருந்தார். அது பற்றி அப்போது ட்விட்டரில்,

‘ஒவ்வொரு படத்திற்கும் நான் வாங்கும் சம்பளத்தில் ஒரு லட்சத்தை போராடி வரும் ஏழை விவசாயக் குடும்பங்களுக்குக் கொடுக்க இருக்கிறேன். அதை இன்றிலிருந்தே ஆரம்பிக்க உள்ளேன். என ட்வீட் செய்திருந்தார்.

இப்போது தஞ்சை விவசாயி தாக்கப்பட்ட நிகழ்வை அறிந்தவுடன் அவரைத் தொடர்புகொண்டு அவருடைய வங்கிக்கணக்கில் ஒரு இலட்சம் செலுத்திவிட்டாராம் கருணாகரன்.
கஷ்டத்தில் இருப்பவனுக்கு உதவி செய்ய ஒரே இனம், மொழி, சாதி, மதம், தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மனிதனாக இருந்தால் போதுமானது என்று பலரும் அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top