குறும் படங்களின் வாயிலாக  சினிமாவில் நுழைந்தவர் கருணாகரன். இன்று வெள்ளித்திரையில் வெற்றி தடம் பதித்து விட்டார்.

சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமானார் இவர். எனினும் இவருக்கென்று ரசிகர் கூட்டம் அமைத்தது தந்தது  சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம்  கதாபாத்திரம் வாயிலாக தான். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே, லிங்கா  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடி என்று மட்டும் அல்லாமல் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

நல்ல பொழுதுபோக்கான படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்கும் நடிகராக பெயர் எடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் தான் ஜிம் மில் உள்ளது போன்ற போட்டோ ஒன்றை நேற்று வெளியிட்டார்..

இந்த போட்டோவை பார்த்த பல இளம் ஹீரோக்கள் கருணாகரனின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.

Karunakaran, Arya, Sathish, Santhosh P Jayakumar

 

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

போற போக்கை பார்த்தல், விளையாட்டு  வீரர்களை   விட அதிக பிட்னெஸ்  நம் தமிழ் நடிகர்களுக்கு வந்து விடும் போலியே !!!