vijayakanth-karthikதமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த போதே தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் அரசியல் மாநாடு ஒன்றில் நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை, கிங்காக இருக்க விரும்புகிறேன் என கூறினார்.

இதற்கு பதிலடியாக நடிகர் கார்த்திக் ‘அவர் கிங்காக இருப்பதைவிட கிங் மேக்கராக இருப்பதே நல்லது. சில நேரங்களில் கிங் மேக்கர்களுக்குத்தான் மரியாதை அதிகம், ரிஸ்கும் குறைவு’ என கூறியுள்ளார்.தற்போது நடிகர் கார்த்திக்கும் தீவிர அரசியலில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.