fbpx
Connect with us

Cinemapettai

பாபி சிம்ஹா நடிக்கும் “மெட்ரோ” படத்தின் சிங்கள் ட்ராக் பாடலை வெளியிட்ட கார்த்தி

News | செய்திகள்

பாபி சிம்ஹா நடிக்கும் “மெட்ரோ” படத்தின் சிங்கள் ட்ராக் பாடலை வெளியிட்ட கார்த்தி

Karthi-Launched-Metro-Single Track Audio Songகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் பெரும்புகழும், தேசிவிருதும் பெற்ற நடிகர் பாபிசிம்ஹா தற்போது கோ 2, இறைவி, பெங்களூர் நாட்கள், பாம்புச்சட்டை, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், 123, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடித்து வரும் படங்களில் ஒன்றாகிய ‘மெட்ரோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகர் கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜோஹான் இசையமைப்பில் கானாபாலா பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விதார்த் நடித்த ‘ஆள்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வரும் இந்த படத்தில் சிரிஷ், சத்யா, செண்ட்ராயன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தங்கக்கடத்தல் குறித்த அண்டர்வேர்ல்ட் சம்பந்தப்பட்ட கதையை உடைய விறுவிறுப்பான படம்தான் ‘மெட்ரோ’ என்று கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top