Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு விழுந்த அடி! கை கொடுத்த கார்த்தி

சூர்யா இதுவரையில் தான் சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை பாதி அவர் நடத்தும் டிரஸ்டில் போடுகிறார். சமீப காலமாக அவர் சினிமாவிலும் பணத்தை வாரி இறைத்துள்ளார் இதற்கு முன் 24 படத்திலும், மகளிர் மட்டும், 36 வயதினிலே, ஆகிய படத்தில் அவர் பிசினஸ் பண்ணியிருக்கிறார் அந்த படத்தில் எதிர்பார்த்த பணம் வரவில்லை குறைந்த அளவு பட்ஜெட் என்றாலும் சில படங்களில் மட்டுமே கிட்ட பணம் வந்துள்ளது.

surya

கடைசியாக சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்தார். கார்த்தி சம்பளம் போக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் வெற்றியை கொடுத்து வசூலையும் வாரி குவித்தது இதனால் சூர்யா சற்று ஆறுதல் அடைந்துள்ளார்.

உலகம் முழுவதும் ரூ 75 கோடி வசூல் செய்துள்ளது, இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 52 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல தியேட்டர்களில் கடைக்குட்டி சிங்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் லாபத்தை வைத்து தான் உறியடி 2 படத்தை இயக்குனர் விஜயகுமாரை வைத்து தயாரிக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top