‘தெறி’ படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ளார். இதில், மொட்டை அடித்ததுபோன்ற ஒரு கெட்டப்பிலும் விஜய் நடித்திருக்கிறார். இந்த கெட்டப் சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கியுள்ளனர். அப்போது விஜய் ரசிகர்களிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் இந்த கெட்டப் வெளியே தெரிய வந்தது.

இதேபோன்ற கெட்டப்பை தற்போது கார்த்தியும், அவர் நடிக்கும் ‘கஸ்மோரா’ படத்தில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபகாலமாக கார்த்தி பொது விழாக்களில் கலந்துகொள்ளும்போது, தலையில் தொப்பியுடன் கலந்துகொள்கிறார். ஆனால், அந்த தொப்பிக்கு பின்புறம் அவரது தலையில் முடி இல்லாததுபோல் இருக்கிறது.

அதிகம் படித்தவை:  'தெறி' 100 நாட்களில் செய்த சாதனையை 3 வாரத்தில் முறியடித்த 'கபாலி'

விஜய்யும் ‘தெறி’ படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களில் இதுபோன்ற தொப்பியுடன் காட்சியளித்தார். பின்பு, அவரது மொட்டைத் தலை வெளிச்சத்துக்கு வந்தது.

அதுபோல்தான், கார்த்தியும் ‘கஸ்மோரா’ படத்தில் மொட்டைத் தலையுடன் நடித்திருப்பார் என்று யூகிக்கப்படுகிறது. ‘கஸ்மோரா’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  ரஜினியின் 2.0 அடுத்து மாஸ் காட்டும் தளபதியின் மெர்சல் தான்..!

இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் கார்த்தி பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.