Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண்டவரின் அடுத்த ஆட்டம்.. பெண்கள் விசயத்தில் எப்போதுமே மன்மதன் தான் நம்ம கமல்
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறுபவர்கள் லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தவர் தமிழ் சினிமாவின் ஆண்டவர் என்று அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன். இன்று தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடும் கமல்ஹாசன் அதே நாளும் தனது தந்தையான ஸ்ரீனிவாசனின் நினைவு நாளை அனுசரிப்பார்.
அந்த வகையில் இன்று தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தைக்கு சிலை ஒன்றை திறந்து வைத்துள்ளார். இங்குதான் ஆண்டவர் அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளித்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் நடித்த நாயகியை வீட்டுக்கே கூட்டிட்டு வந்ததுதான் அந்த அதிர்ச்சி.
ஆமாம். இன்று கமலஹாசன் வெளியிட்ட பிறந்தநாள் புகைப்படத்தில் நடிகை பூஜா குமாரும் இடம் பெற்றிருந்தார். வழக்கம்போல ஆண்டவர் தன் வேலையை காட்டிவிட்டார் என நெட்டிசன்கள் இணையதளங்களில் குசும்பு செய்து வருகின்றனர்.
சமீபத்தில்தான் நடிகை கௌதமியுடன் தான் வைத்திருந்த உறவை வெட்டி எறிந்தார். அதற்குப்பின் ஆண்டவரின் அடுத்த டார்கெட் என பூஜா குமாரை அசால்டாக ஆட்டைய போட்டு விட்டார். 60 வயது ஆனாலும் பெண்கள் விஷயத்தில் தான் எப்போதுமே ஒரு மன்மதன் தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார் நமது கமல்.
இதுவும் ஒரு வகை மருத்துவ முத்தம் தான்.!

kamal-family-photo
