Connect with us

Cinemapettai

தமிழகத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவல நிலை.? மர்மங்களை அவிழ்த்துவிடும் மக்கள் நீதி மய்யம் கமலஹாசன்!

kamal-mnm-1

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகத்திற்கு மட்டும் ஏன் இப்படி ஒரு அவல நிலை.? மர்மங்களை அவிழ்த்துவிடும் மக்கள் நீதி மய்யம் கமலஹாசன்!

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக திகழ்ந்த நடிகர் கமலஹாசன் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவரது மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூலம் முதல்வர் வேட்பாளராக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளார்.

எனவே தனது அரசியல் மேடைகளில் காரசாரமான விவாதங்களை ஈடுபடும் கமலஹாசன், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான கேள்விகளை கேட்டுள்ளார். ஏனென்றால் ‘RT-PCR கொரோனா பரிசோதனைக்கான கட்டணமானால், டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000.

ஆனால் தமிழகத்தில் மட்டும் ரூ. 3000. தற்போது பல மாநிலங்கள் கட்டணத்தை குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தை ஏன் தொடர்வதன் மர்மம் என்ன?’ என்ற கேள்வியை கமலஹாசன் முன்வைத்துள்ளார்.

bb4-kamal-cinemapettai

bb4-kamal-cinemapettai

எனவே இவருடைய கேள்வி நியாயம்தான் என்றும், ஏன் தமிழகத்தில் மட்டும் கொரோனாற்கு இவ்வளவு கட்டணம் வசூலிக்கிறார்கள்? என்பது மக்களின் குரல் ஒலியாக இருந்தது.

எனவே தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்காக வாங்கும் கட்டணத்தை நிர்ணயித்து அதனை செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top