காதலருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வரும் 35 வயது நடிகை.. இவங்க மூத்த நடிகரின் மகளாச்சே!

காதல் மோகத்தில் ஊரடங்கை பயன்படுத்தி 24 மணி நேரமும் காதலருடன் ஜாலியாக இருக்கும் மூத்த நடிகரின் மகளைப் பற்றி தான் தற்போது கோலிவுட் வட்டாரம் பேசிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவருக்கும் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட பொருத்தம் இருக்கிறது. கமல்ஹாசனுடன் ஒவ்வொரு படங்களில் நடிக்கும் ஒவ்வொரு நடிகைகளுக்கும் பின்னாளில் கிசுகிசு வந்துவிடும்.

அது தற்போது அவரது மகளுக்கும் தொடர்கிறது போல. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து பின்னர் தமிழ், ஹிந்தி என கொடிகட்டிப் பறந்தவர் தான் ஸ்ருதி ஹாசன். தற்போது விஜய் சேதுபதியுடன் தமிழில் லாபம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்ததும், அவர் தான் தன்னுடைய மகளின் கணவர் என கமலஹாசன் அவரை செல்லும் இடமெல்லாம் அழைத்துச்சென்று பிரபலப்படுத்தியது நினைவிருக்கலாம்.

பின்னாளில் ஸ்ருதிகாசன் மற்றும் அவரது காதலர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் தனிமையில் வசித்து வந்த ஸ்ருதிஹாசனுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வேறு ஒரு காதலர் கிடைத்துள்ளார்.

சமீபகாலமாக இருவரும் வெளியில் சுற்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர்களைப் பற்றிய அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது புதிய காதலர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் மும்பையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. இருவரும் அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களை வெளியிட்டதால் இப்படி வதந்தியை கிளப்பி விட்டார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai
- Advertisement -spot_img

Trending News