Tamil Cinema News | சினிமா செய்திகள்
புது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.
புது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்…
நடிகை ஸ்ருதிஹாசன் தனது திரைப்பயணத்தின் புதிய அவதாரமாக தயாரிப்பாளராகி இருக்கும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

sruthi
உலகநாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்ற ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பாடகியாக தான் அறிமுகமானார். தேவர் மகன் படத்தில் தொடங்கிய அவர் பயணம், தொடர்ந்து பல படத்தில் நீடித்தது. ஹேராம், என்மன வானில், வாரணம் ஆயிரம், லக் மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். 2011இல் வேறு திசை நோக்கி திரும்பினார். அதன்படி, பாடகி டூ நாயகி அவதாரம் எடுத்தார். சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் பெரும் ஹிட் அடித்தது ஸ்ருதியின் சினிமா வாழ்க்கையில் ஏறுமுகமாக அமைந்தது. பல ஊடகங்களும் ஸ்ருதியின் நடிப்பை வெகுவாக பாராட்டியது. தொடர்ந்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் வாய்ப்புகள் வர தொடங்கியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 3 படத்தில் ஸ்ருதியின் தமிழ் திரைப்பட பயணம் சரியான பாதையை நோக்கி பயணித்தது. ஸ்ருதி எல்லா வாய்ப்புகளுக்கு சட்டென ஓகே சொல்பவர் இல்லை. தற்போது ஸ்ருதிஹாசன் அவரது ஹ்

sruthi haasan
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து இருக்கிறார். தனது சொந்த நிறுவனமான இஸிட்ரோ மீடியா சார்பில் ‘த மஸ்கிட்டோ பிலாஸபி ’என்ற படத்தை வெளியிடுகிறார். இதனை ‘லென்ஸ்’ பட புகழ் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், ‘த மஸ்கிட்டோ பிலாஸபி’ கதையை கேட்டதும், இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இயக்குனரின் முந்தையை படம் ஏற்கனவே பெரிய தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தி இருந்தது. இதனை இசிட்ரோ மூலம் வழங்குவதில் பெருமையடைகிறேன். அவருடன் தொழில் முறையிலான உறவு நீடிக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
@isidromediaoffl presents the mosquito philosophy pic.twitter.com/OXnLzEeuvS
— shruti haasan (@shrutihaasan) June 21, 2018
