Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் வெளிவந்த உண்மை.. திடுக்கிடும் தகவல்களால் உறைந்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நிறைந்த மிரட்டும் வில்லனாக நடித்தவர் கலாபவன் மணி. சில வருடங்களுக்கு முன்பு இவர் இறந்துவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கலாபவன் மணியின் மரணம் பற்றிய உண்மை தற்போது வெளிவந்துள்ளது.
ஜெமினி, வேல் போன்ற படங்களில் நடிப்பாலும், நகைச்சுவையாலும் வில்லன் கதாபாத்திரத்தை மிகவும் ரசிக்க வைத்தவர். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் அவருக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார்.
அவர் சமீபத்தில் கல்லீரல் குறைபாட்டினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையிலேயே அவர் அதனால் மட்டும் இருக்கவில்லை என தற்போது திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ள. கலாபவன் மணிக்கு தினமும் பீர் குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதுவும் டின் பீர் என்றால் விரும்பி குடிப்பாராம்.
குறைந்தது ஒரு நாளைக்கு 15 டின் பீர் ஆவது குடித்து விடுவாராம். 2016 ஆம் ஆண்டு அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் கல்லீரல் குறைபாட்டினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கலாபவன் மணி இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிபிஐ விசாரணை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் விசாரணையை தொடர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியான செய்திகள் வெளிவரத் தொடங்கியது. அதில் மணி மதுவில் எத்தனால் கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் மட்டும் உயிர் பிரியவில்லை. பச்சையான காய்கறிகளை உண்ணும் பழக்கம் கொண்ட மணி உடம்பில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாகவும் தெரிகிறது. சுத்தம் இல்லாத காய்கறிகளை சாப்பிட்டதே இதன் காரணம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பச்சைக் காய்கறிகளை உண்பதற்கு யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருந்தும் சிறந்த கலைஞன் இழந்தது அனைவருக்கும் வருத்தமாக உள்ளது.
