பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்துக்கு துப்பறிவாளன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மிஷ்கினின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் இதுவும் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. இதில் விஷால் ஜோடியாக தெலுங்கின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க பிரசன்னா, பாக்யராஜ் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது ‘உன்னாலே உன்னாலே’ புகழ் வினய்யும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.