Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றி படமே இல்லாததால் அகல கால் எடுத்து வைக்கும் ஜீவா.. அப்பாவை எதிர்த்து விபரீத முடிவு

ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.

நடிகர் ஜீவா ஒரு சாக்லேட் ஹீரோவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். பெரிய தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் அதை காட்டிக் கொள்ள விரும்பாதவர் தான் இவர். ஆரம்ப காலங்களில் காதல் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதன் பின்னர் ராம், ஈ போன்ற வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

ஜீவாவுக்கு தொடர்ந்து ஹிட் படங்கள் அமையவில்லை என்றாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும். இதனால் தமிழ் சினிமாவில் அவர் முன்னணி ஹீரோவாகவே பார்க்கப்பட்டார். ஜீவாவுக்கு சினிமா கை கொடுத்த அளவிற்கு அவருடைய அண்ணன் ஜித்தன் ரமேஷுக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் ஒன்றிரண்டு படங்களோடு தற்போது நடிப்பை நிறுத்திக் கொண்டார்.

Also Read:தயாரிப்பாளர்கள் தலையில் துண்டு போட்ட 6 நடிகர்கள்.. சாக்லேட் முகத்தால் பரிதவிக்கும் ஜீவா

இப்படி வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த ஜீவாவுக்கு கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கூட அமையவில்லை. சமீபத்தில் இவர் வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் கூட நடித்து இருக்கிறார். பட வாய்ப்புகள் இல்லாமல் , மார்க்கெட் குறைந்ததை புரிந்து கொண்ட ஜீவா தன்னுடைய அடுத்த திட்டத்திற்கு தயாராகி வருகிறார். ஆனால் அது அவருடைய சொந்த அப்பாவையே எதிர்க்கும் முடிவாக இருக்கிறது.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரியின் மகன்கள் தான் ஜீவா மற்றும் ரமேஷ் என்பது பலருக்கும் தெரியும். கோலிவுட் சினிமாவில் இந்த நிறுவனம் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறது. தற்போது ஜீவா படம் தயாரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் அது அவருடைய தந்தையை நிறுவனத்தின் மூலமாக இல்லாமல் அவரே சொந்தமாக சூப்பர்ஹிட் ஸ்டுடியோ சென்ற நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.

Also Read:ஜீவா வளர்ச்சியை கெடுத்த 5 படங்கள்.. அதல பாதாளத்திற்குச் சென்ற மார்க்கெட்

இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கு ஜீவாவுக்கு பைனான்ஸ் செய்வது பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸின் உரிமையாளர் ஐசரி கணேஷ் தான். அப்பாவையே எதிர்த்து அவருக்கு போட்டியாக தொழில் தொடங்குவதால் ஜீவாவுக்கும் அவருடைய அப்பாவுக்கும் மனக்கசப்பு இருப்பது நன்றாகவே தெரிகிறது. இதனால் தான் இன்னொருவரின் உதவியோடு தயாரிப்பு பணிகளை தொடங்கி இருக்கிறார்.

ஜீவா தன்னுடைய சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படம் ஆன சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகத்தை தான் முதன் முதலில் தயாரிக்க இருக்கிறார். இயக்குனர் ராஜேஷ் தான் அந்த படத்தையும் இயக்குகிறார். தற்பொழுது ராஜேஷ் ஜெயம் ரவியின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் அது முடிந்த பிறகு இந்த பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.

Also Read:படத்தில் கல்லா கட்ட முடியாமல் ரூட்டை மாற்றிய ஜீவா.. இதுலயாவது நல்ல நேரம் வரட்டும்

Continue Reading
To Top