fbpx
Connect with us

Cinemapettai

பார்வை இல்லாதவரின் குரலில் மனதை வருடும் செவ்வந்தியே பாடலை கொடுத்த இமான்.. லிரிக் வீடியோ

Videos | வீடியோக்கள்

பார்வை இல்லாதவரின் குரலில் மனதை வருடும் செவ்வந்தியே பாடலை கொடுத்த இமான்.. லிரிக் வீடியோ

கலகலப்பு-2 படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சீறு. அதிரடி இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் விறுவிறுப்பான கதை களத்துடன் உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.

நீண்ட நாட்களாக வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த ஜீவாவிற்கு கலகலப்பு 2 திரைப்படம் ஒரு மாதிரியான வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சீறு திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கண்பார்வையற்ற திருமூர்த்திக்கு பாட வாய்ப்பளித்து மேலும் தனது மனிதாபிமானத்தை காட்டியுள்ளார் இமான். விஸ்வாசம் படத்தில் உருவான கண்ணான கண்ணே பாடலை பாடி இமானை கவர்ந்தவர் அவர்.

தற்போது அவருக்கு வாழ்க்கை அளிக்கும் வகையில் தனது இசையில் பாட வாய்ப்பளித்துள்ளார். சமீபகாலமாக நல்ல திரைப்படங்களை வழங்கிக்கொண்டிருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதோ செவ்வந்தியே லிரிக் வீடியோ :

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top