Connect with us

Cinemapettai

jayam-ravi

Cinema News | சினிமா செய்திகள்

ஷூட்டிங்கில் சிகரெட்டை ஊதி தள்ளிய பிரபல நடிகர்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தற்போது உள்ள மக்களின் மனநிலை என்னவென்றால், ஒரு நடிகர் எந்த மாதிரி பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறாரோ அவரது ரசிகர்களும் அதையே பின்பற்றும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் போன்றவர்களின் ரசிகர்கள் அவர்களை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு அவர்களை பின்பற்றி வருகின்றனர்.

அதேபோல் சமீப காலமாக தமிழக மக்களின் செல்லப் பிள்ளையாகவும் தமிழ் சினிமாவின் ஒழுக்கமான நடிகர்களில் ஒருவராகவும் அறியப்படுபவர் ஜெயம் ரவி. ஆனால் அவரே தனது டென்ஷனை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் சிகரெட் அடித்துள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் சூட்டிங்கில் இருக்கும் ஜெயம் ரவி, ஷூட்டிங் இல்லாத நேரத்தில் ஏதோ டென்ஷனான மனநிலையில் தனியாக அமர்ந்து புகை பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த புகைப்படத்தைப் பார்க்கும்போது கண்டிப்பாக அவர் படத்தில் நடிக்கும் காட்சியில் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

jayam-ravi

jayam-ravi

அனைவரும் ஒழுக்கமான நடிகர் என தமிழக மக்களால் முத்திரை குத்தப்பட்ட இவரின் இத்தகைய செயல் சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top