Connect with us
Cinemapettai

Cinemapettai

actor-jai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

படமே ஓடமாட்டுகுதுப்பா.. அந்த விஷயத்தை கேள்விப் பட்டதும் ஜெய்க்கு குவியும் வாய்ப்பு

ஜெய் என்னதான் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் அவருக்கு படங்கள் ஓடுவதில்லை. ரொம்ப காலமாகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். சமீபகாலமாக 2, 3 ஹீரோ படங்களில் அதிகம் தலைகாட்டும் ஜெய் இப்பொழுது புது அவதாரம் எடுத்துள்ளார்.

மேலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஜெய் இப்பொழுது புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்துள்ளார். இன்னிலையில் சினிமாவில் ஹீரோவாக இருந்தால் ஜெயிக்க முடியாது. அதனால் வேறு ஒரு புது ரூட்டில் களமிறங்கியிருக்கிறார் நடிகர்.

பகவதி படத்தில் தளபதி விஜய்க்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெய் சென்னை 600028, சுப்ரமணியபுரம், சரோஜா என தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்பொழுது பத்ரி நாராயணன் இயக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆன பட்டாம்பூச்சி என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெய். இந்த படத்தில் அவர் ஹீரோ இல்லையாம். அவர்தான் கதாநாயகனாக நடிக்கும் சுந்தர் சி-க்கு வில்லனாக இந்தப் படத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தின் மூலம் ஜெய் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.

இந்தப்படத்தில் படத்தின் டிரைலர் சமீபத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதில் ஜெய் மற்றும் போலீஸ் கெட்டப்பில் நடித்திருக்கும் சுந்தர் சி-யுடன் உடன் ஹனிரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் வரும் ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. பட்டாம்பூச்சி படத்தில் ஜெய் வில்லனாக நடிப்பதை கேள்விப்பட்டதும் 2,3 படங்கள் இவர் வில்லனாக நடிக்க அழைப்பு வருகிறதாம். அதனால் இனி வில்லன் அவதாரம் எடுக்கப் போகிறாராம்.

Continue Reading
To Top