Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிகில் வில்லனுக்கு இவ்வளவு அழகான மகளா! அட்டகாச கவர்ச்சியில் கிருஷ்ணா ஷராஃப்
பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் நடிகர் ஜாக்கி ஷெராப். தமிழிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆரண்ய காண்டம், முப்பரிமாணம், கோச்சடையான் போன்ற படங்களில் அவருக்கே உரிய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருப்பார்.
அதேபோல் சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்திலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர். ஜாக்கி ஷெராப்ன் மகன் தற்போதைய பாலிவுட் சினிமாவின் ஹாட் நாயகனாக வலம் வரும் டைகர் ஷெராப் தான்.
டைகர் ஷெராப் மற்றும் ரித்திக் ரோஷன் சமீபத்தில் நடித்து வெளியான வார் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜாக்கி ஷராப்க்கு கிருஷ்ணா ஷெராப் என்ற மகள் உள்ளார். இவர் சமீபத்தில் தனது காதலருடன் கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் பரபரப்பை கிளப்பியது.
அதேபோல் தற்போது நீச்சல் குளத்தின் அருகில் அதற்கே உரிய உடையணிந்து படுத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மேலும் கிருஷ்ணா, நிர்வாணமாக உணர்கிறேன் எனவும் கருத்து பதிவிட்டுள்ளார். கிருஷ்ணா ஷெராப் இன்ஸ்டாகிராம் புகைப்படம் படுவைரலாக பரவி வருகிறது.
மேலும் பல லட்சம் லைக்குகளையும் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜாக்கி ஷராஃப், சூர்யாவின் சூரரைப்போற்று படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
