Connect with us
Cinemapettai

Cinemapettai

actor-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த சினிமா கேரியர்.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டதால் நடிகர் படும்பாடு

டாப் நடிகர் ஒருவர் வந்த புதிதில் தமிழ் ரசிகர்களை கட்டி இழுத்தார். காரணம் தமிழனுக்கு உண்டான முகமும், ஆறடி உயரமும் தான் காரணம். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர டாப் நடிகர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை என்றாலும் அதற்கு அடுத்த லிஸ்டில் நடிகர் இடம்பெற்றிருந்தார்.

தொடர்ந்து அவரது படங்கள் ஹிட் கொடுத்ததால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் அவரை நாடி வந்தனர். ஆனால் ஒரு எல்லைக்கு மேல் தன்னுடைய படங்கள் நன்றாக ஓடுவதால் தலைக்கனம் ஏறிவிட்டது. இதனால் பெரிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நடிகர் மரியாதை கொடுப்பதில்லை.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

அதுமட்டுமின்றி ஒழுக்கம் என்பதை சுத்தமாகவே மறந்து விட்டார். அவர் நினைத்தால் படப்பிடிப்புக்கு வருவது, இல்லை என்றால் வீட்டிலேயே குடித்து மட்டையாவது என ஊதாரித்தனமாக இருந்தார். அதன் விளைவாக சமீபகாலமாக ஒரு ஹிட் படம் கூட அவரால் கொடுக்க முடியவில்லை.

மேலும் சினிமா வட்டாரத்தில் வேறு யாருக்காவது பிரச்சனை என்றால் அதிலும் போய் மூக்கை நுழைத்து பிரச்சனையை தானாகவே வாங்கிக் கொண்டு வருகிறார். கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் தற்போது இவருக்கு படம் கொடுக்க யாரும் முன் வரவில்லை.

இதனால் கிட்டத்தட்ட அவரது சினிமா கேரியரே முடிவுக்கு வந்தது. வெளியில் மட்டும் கைவசம் பல படங்கள் வைத்துள்ளது போல பந்தா காட்டி வருகிறார். ஆரம்பத்தில் நல்ல பண்பு உள்ளவராக இருந்த அந்த நடிகர் பணம், பதவியை பார்த்து அப்படியே தலைகீழாக மாறியதால் சினிமா வாழ்க்கையை கேள்விக்குறியாக மாறி உள்ளது.

Also Read : புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

Continue Reading
To Top