Connect with us
Cinemapettai

Cinemapettai

actor-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

ஹோட்டலே கதி என இருக்கும் முன்னணி நடிகர்.. கலக்கத்தில் குடும்பத்தினர்!

தமிழ் சினிமாவில் மிக வேகமாக உயர்ந்து வரும் நடிகர் தான் அந்த இளம் நடிகர். பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முன்னரெல்லாம் குடும்பம், குட்டி என பொழுதை கழித்து வந்த இந்த முன்னணி நடிகர் சமீபகாலமாக ஹோட்டலே கதி என இருப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.

வருடத்திற்கு 3 படங்கள் என செல்வச் செழிப்பாக இருந்து வருகிறார் அந்த இளம் நடிகர். படத்திற்கு படம் தன்னுடைய மார்க்கெட் ஏறிக்கொண்டே செல்கிறது.

தற்போது கூட கைவசம் மூன்று படங்கள் வைத்துள்ளாராம். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் ஒருவருடன் காமெடி கலந்த கமர்சியல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம். ஏற்கனவே சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் தற்போது அந்த நடிகர் வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விட்டாராம்.

மேலும் தொடர்ந்து ஹோட்டலிலேயே தங்கி வருகிறாராம். படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட 10 முதல் 20 நாட்கள் ஹோட்டலில் தங்கி விட்டு தான் குடும்பத்தினருடன் சேர இருப்பதாக அவரது வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

Continue Reading
To Top