புதன்கிழமை, மார்ச் 19, 2025

முதல் மேடையிலேயே டேமேஜ் ஆன இமேஜ்.. நண்பர்களிடம் உதவி கிடைக்காததால் விரக்தி

தவளை தன்வாயால் கெடும் என கூறுவார்கள் அல்லவா அதுபோல சமீபத்தில் ஒரு இளம் நடிகர் தன் வாயாலே தனக்கு ஆப்பு வைத்து கொண்டார். பல ஆண்டுகளாக படங்களில் நடிக்க முயற்சி செய்து வந்த அந்த நடிகருக்கு சின்னத்திரை வாய்ப்பு தான் கிடைத்தது. இருப்பினும் அவருக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்தார்.

அந்த சமயத்தில் தான் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். அதன் மூலம் நடிகர் ஊர் முழுவதும் பிரபலமாகி விட்டார். மேலும் ஏராளமான பெண் ரசிகைகள் வேறு. இதுதவிர நடிகர் நடிப்பில் வெளியான ஆல்பம் பாடல்கள் வேறு அடுத்தடுத்து ஹிட் அடித்ததால் அந்த நடிகருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வீடு தேடி வந்தது.

அதன்படி அவர் ஹீரோவாக நடித்துள்ள முதல் படமும் நல்ல படியாக முடிந்து படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய அந்த நடிகர் படம் கிடைத்துவிட்ட மிதப்பில் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வைத்துள்ளார். மேலும் இயக்குனர்கள் பற்றி அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் அவர் மீது கோபத்தில் உள்ளார்கள். சோசியல் மீடியாவிலும் நடிகர் குறித்து பல்வேறு விமர்சனங்களும், மீம்களும் உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் நடிகர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளாராம்.

மேலும் டேமேஜ் ஆன தன்னுடைய இமேஜை சரிசெய்ய தன் நண்பர்களுக்கு போன் செய்து, எனக்கு ஆதரவாக பேசுங்கள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யுங்கள் என கேட்டாராம். ஆனால் யாருமே அவருக்காக குரல் கொடுக்கவில்லையாம். இதனால் தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை நீக்க பலரிடம் ஆலோசனை கேட்டு போராடி வருகிறாராம்.

Advertisement Amazon Prime Banner

Trending News