மெட்ராஸ் படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரி கபாலியில் டைகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை கிளைமேக்ஸில் இவர் சுடுவாரா? இல்லையா? என்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதுக்குறித்து இவர் கூறுகையில் ‘ரஜினி சார் நான் சுட்டனா? இல்லையா? என்பதற்கு உங்கள் பார்வை தான் பதில், ஒருவேளை அவர் என்னை சுட்டு இருக்கலாம், அல்லது நான் பின்னால் இருப்பவர் யாரையாவது சுட்டு இருக்கலாம்.

மேலும் படத்திலேயே ஒரு நண்டுக்கதை வரும் அப்படி ஒரு நண்டு தான் நான்’என கலகலப்பாக கூறிவுள்ளார்.