சமீபத்தில் பல சமுக கருத்துகளை பதிவிட்டு வருகிறார் நடிகர் ஜி.வி பிரகாஷ்குமார்.

padman
padman

அக்ஷய் குமார் நடித்து வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கும் படம் ‘பேட்மேன்’ கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்த விலை குறைந்த நப்பிகினை தயாரிக்கும் இயந்திரம் கண்டுபித்தார். முருகானந்தம் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட்மேன்.

padman
padman

இந்த படம் வரும் 9-ஆம் தேதி திரைக்கு வரும்நிலையில் பல பிரபலங்கள் பேட்மேன் சவால் விடுகிறார்கள். அவர்கள் யாருக்கு சவால் விட போகிறார்களோ அவர் சானிடரி பேடுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.

padman
padman

இந்தியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் மேலும் அவர் விராட் கோஹ்லி சவால்
விடுத்துள்ளார்.

அனுஷ்கா சர்மா பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து கையில் பேடுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைதனை கொளுத்துவோம். பெருந்தமிழர் #ArunachalamMuruganantham வழி நின்று உலகுக்கு உரக்க சொல்வோம் பெண்கள் மாதந்தோறும் எதிர் கொள்ளும் ‘மாதவிடாய்’ இயற்கையே என்று கூறி கமல் ஹாஸன், ராஜமவுலி, டோணி ஆகியோருக்கு சவால் விட்டுள்ளார் ந ஜி.வி. பிரகாஷ் குமார்.

தற்போது பேடுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்யலுக்கு ரசிகர்களும் ஜி.வி. பிரகாஷை பாராட்டியுள்ளனர்.