குடிக்கு அடிமையான வாரிசு நடிகர்.. படமே ஓடாவிட்டாலும் கைவசம் 8 படங்கள்!

சமீபத்தில் வாரிசு நடிகர் பற்றிய சர்ச்சையான விஷயங்கள் நிறைய பரவி வருகின்றன. சூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை, பெண்களுடன் ஊர் சுற்றுவது, அடிக்கடி கேளிக்கை விருந்தில் நேரத்தை செலவிடுவது என அடுக்கடுக்காக புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

அமைதியான அப்பா அவருக்கு, பையனா இவர்! என்று சொல்லும் அளவிற்கு ஆட்டம் ஜாஸ்தியாக இருக்கிறது. முரளியின் மகன் அதர்வா சினிமா துறையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறார். படங்கள் ஓடாவிட்டாலும் கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார் அதர்வா.

2010 ஆம் ஆண்டு பத்ரி வெங்கடேஷ் எழுதி இயக்கிய பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக முரளியின் மகன் அதர்வா அறிமுகமானார். அதன் பிறகு முப்பொழுதும் உன் கற்பனை, பரதேசி, இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி போன்ற படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிக் காட்டினாலும் அதர்வா எதிர்பார்த்த அளவுக்கு சினிமாவில் அவரால் உச்சம் பெற முடியவில்லை.

இருப்பினும் விடாமுயற்சியைக் கைவிடாத அதர்வா நடிக்கும் படங்களுக்கு ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்தாலும் அடுத்தடுத்த படங்களில் வெற்றி கிடைக்கும் என்ற நோக்கத்தில் கையிலெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் தற்போது அதர்வா அடுத்தடுத்த படங்களில் வரிசையாக கமிட்டாகி கொண்டிருக்கிறார்.

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் த்ரில்லர் படமான ‘குருதி ஆட்டம்’ அடுத்த ஆண்டு திரையிட பட குழு திட்டமிட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் ‘ட்ரிக்கர்’ என்ற மற்றொரு படத்திலும் நடிக்கிறார்.

இதில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் அவர்களுடன் அருண்பாண்டின், சீதா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த 2 படங்கள் மட்டுமல்லாமல் லோகல் டிரெயின், அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த நிறங்கள் மூன்று என அதர்வா கைவசம் 8 படங்கள் வைத்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்