நாகேஷ் போல் பிசிரு தட்டாமல் பறக்கும் மார்க்கெட்.. சந்தானத்திற்கு ஏற்பட்ட கடும் வயிற்றெரிச்சல்

மக்கள் எதிர்பார்க்கும் பழைய சந்தானத்தை பார்த்து 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. கடைசியாக அவர் மற்ற ஹீரோக்களுக்காக காமெடி கதாபாத்திரத்தில் நடித்த படம் 2017ஆம் ஆண்டு வெளிவந்த “எனக்கு வாய்த்த அடிமைகள்”. தற்சமயம் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் சந்தானம்.

சர்வர் சுந்தரம், சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு, ஏ1 என அடுத்தடுத்த படங்களில் நடித்து முழு நேர ஹீரோவாக மட்டுமே தன்னை மாற்றிக் கொண்டார். ஆனால் ஹீரோவாக நடிப்பதில் அந்த காமெடி கலந்த கதைகளை மட்டும் கைவிடவில்லை. தொடர்ந்து அதே டிராக்கில் இன்று வரை பயணித்து வருகிறார்.

காமெடி என்னும் ஒரே டிராக்கில் மட்டுமே சந்தானம் பயணித்ததால் அவரை மக்கள் ஒரு சீரியஸான நடிகராக பார்க்க விரும்பவில்லை. இதுதான் சந்தானம் சறுக்கிய இடம். இன்றுவரை சந்தானம் தன்னுடைய ரூட்டை மாற்றி எந்த ஒரு பட கதைகளையும் தேர்வு செய்யவில்லை. இதனால் அவரின் படங்கள் அனைத்தும் சலிப்பு தட்டுகிறது.

சந்தானத்திற்கு ஏற்பட்ட கடும் வயிற்றெரிச்சல்

கிக், 80ஸ் பில்டப், வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான் தான் கிங் என அடுத்தடுத்து தொடர் தோல்விகள். இப்பொழுது இந்த நேரம் தான் தனக்கானது என சுதாரித்துக் கொண்ட பரோட்டா சூரி சந்தானத்தை ஓவர் டேக் செய்து விட்டார். அடுத்தடுத்து தொடர் சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து சந்தானத்திற்கு கடும் வயிற்றெரிச்சலை கொடுத்து வருகிறார்.

சூரி இப்பொழுது விடுதலை, கருடன், கொட்டுக்காலி என அடுத்தடுத்து ஹீரோவாக மட்டுமே நடித்தாலும் பழைய காமெடி பண்ணும் கதாபாத்திரத்தை விட்டுக் கொடுக்கவில்லை. பழைய நடிப்பு அரக்கன் நாகேஷ் இடத்தை அப்படியே பிடித்து விட்டார் சூரி. நாகேஷும் காமெடி கதாபாத்திரம் நடித்தாலும், தனக்கான நல்ல கதை அமைந்தால் ஹீரோவாகவும் நடித்து அசத்து விடுவார். தற்சமயம் சூரி அடுத்த நாகேஷ் என்ற பெயரை பெற்றுள்ளார்.

Next Story

- Advertisement -