India | இந்தியா
கொரோனா நிதியாக 25000 பேர் பேங்கில் ரூ3000 போட்ட நடிகர்.. ஒரு மினி அரசாங்கமே நடத்திட்டார் என புகழும் மக்கள்
ஊரடங்கு உத்தரவினால் மக்கள் ஏப்ரல் 15ஆம் தேதி எப்போ வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் போராட்டத்தில் உள்ளனர்.
இந்த ஊரடங்கு உத்தரவு இன்னும் சில தினங்களுக்கு அதிகரிக்கலாம் என்று ஆலோசனை நடைபெற்று வருகிறதாம். இந்த நிலையில் பல சினிமா துறையை சேர்ந்த நடிகர் நடிகைகள் தங்களால் முடிந்த நிதி உதவி அளித்து வருகின்றனர்.
சல்மான் கான் வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று தினக்கூலியாக வேலை பார்க்கும் சினிமா துறையை சேர்ந்த 25000 பேரின் பேங்க் அக்கவுண்டில் 3000 ரூபாய் போட்டுள்ளாராம்.
அதாவது கிட்டத்தட்ட 7 கோடிக்கு மேல் நிதி வழங்கியுள்ளார். இணையதளத்தில் சல்மான்கானை பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். ஏனென்றால் மாச சம்பளம் வாங்கும் மக்களைவிட தினக் கூலிகளாக இருக்கும் மக்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை நன்கு ஆராய்ந்து சல்மான்கான் செயல்பட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தைப் பொருத்தவரை சமூக ஊடுருவல் இல்லாமல் இந்த வைரசை கட்டுப் படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 21 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனாலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திற்கு குறைவான நிதியை மத்திய அரசின் மூலம் பெறப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவைத் அடுத்தபடியாக தமிழ்நாடு இருப்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாநில அரசு மக்களை பல வழிகளில் தெரிவித்து வருகின்றனர்.
