என்னைப் பற்றி தொடர்ந்து வந்த வதந்திகளால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாக மலையாள நடிகர் திலீப் அதிர்ச்சிகரமாக தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி இரவு படப்பிடிப்பு முடிந்து திருச்சூரிலிருந்து கொச்சிக்கு தனது காரில் வந்து கொண்டிருந்த பிரபல நடிகையை மலையாள நடிகர் திலீப் தான் ஆள் வைத்து காரில் கடத்தி மானபங்கம் செய்ய வைத்தார் என மலையாள திரையுலகில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நடிகை காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்த செய்தியை அறிந்து முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் அதற்கு நான் தான் முழுக்காரணம் என்று மும்பையை சேர்ந்த மீடியா ஹவுஸ் புரளியை கிளப்பி விட்டது.

மற்றவர்களும் இதனை நம்பி என் மீது தொடர்ந்து புரளியை நாடு முழுவதும் பரப்பினர்கள்.என் வாழ்க்கை பற்றிய வதந்திகளை நான் பல ஆண்டுகளாக பொறுத்துக் கொண்டு வருகிறேன். என்னை பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்கு கவலை இல்லை. என் மீது தவறான கருத்தும் சமீப காலமாக என்னை பற்றி வரும் வதந்திகளை மக்கள் உண்மை என நம்பத் துவங்கியுள்ளதால் நான் அது குறித்து தெரிவிக்க  இப்போது நான் பேசுகிறேன்.

நடிகை மானபங்கப்படுத்தப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று வந்த வதந்திகளால் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். ஆனால் என் மகள் மீனாட்சியை நினைத்து தற்கொலை செய்யவில்லை என்றார்.ஒன்றை நினைப்பதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.மகளின் வாழ்க்கையை நினைத்து தற்கொலை செய்வதை செயல்படுத்தவில்லை என்றார்.