Tamil Cinema News | சினிமா செய்திகள்
எப்ப பார்த்தாலும் விஜய் பற்றிய கேள்வி.. எரிச்சலான தீனாவின் பதில்
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களையும் தாண்டி வில்லன் நடிகர்கள் பெரிதும் மக்களால் ரசிக்கபடுவார்கள். அந்த வகையில் நமக்கு நினைவுக்கு தெரிந்தவரை ரகுவரன் அவர்களுக்கு மட்டுமே அந்த அளவு ரசிகர் பட்டாளம் இருந்தது.
அதன்பிறகு ஆனந்தராஜ், பொன்னம்பலம் என நிறைய பேரு வில்லன் கதாபாத்திரங்களில் தங்களுடைய முத்திரையைப் பதித்துள்ளனர். தற்போது அவர்கள் காமெடி நாயகர்களாகவும் நடித்து வருகின்றனர்.
இந்த வகையில் அனைவருக்கும் பரீட்சை வில்லனாக தற்போது வலம் வருவது தீனா. கமலஹாசனின் விருமாண்டி படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். தெறி படத்தில் இவர் சொல்லும் வாரி தின்னுட்டு போயிடுவேன் எனும் டயலாக் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.
சமீபகாலமாக யூடியூப் சேனல்கள் அவரை பேட்டி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரு யூடியூப் சேனல் அவரை பேட்டி எடுக்க செல்லும்போது நடந்தவற்றை அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் கேள்வி கேட்பதற்கு நான் உண்மையாக பதில் கூறுவேன். ஆனால் இதையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என எண்ணி, மீண்டும் உச்ச நடிகர்கள் பற்றி கேட்பார்கள். விஜய் அண்ணன் ஒரு அற்புதமான மனிதர் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
இருந்தும் ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போது அவரைப் பற்றி கேட்டால் நான் என்ன சொல்வது. மற்றவர்களை புகழ்ந்து பேசுவதற்கு என்னை ஏன் பேட்டி எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பு தன்னுடன் நடித்த விஜய் மற்றும் அஜீத் எப்படிப்பட்டவர்கள் என்பதை பல பேட்டிகளில் கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
