Connect with us

Cinemapettai

தளபதி விஜய் அண்ணா இல்லன்னா நாங்க அனாதை தான்.. உருகும் வில்லன் நடிகர் தீனா

villain-dheena

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய் அண்ணா இல்லன்னா நாங்க அனாதை தான்.. உருகும் வில்லன் நடிகர் தீனா

தளபதி விஜய் படங்களில் சமீபகாலமாக நெகட்டிவ் ரோலில் அதிகமாக நடித்து வருவது, தீனா தான். இவர் தெறி படத்தில் பேசிய “வாரி துன்னுட்டு போயிருவேன்”என்கிற வசனம் விஜய் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்.

இந்நிலையில் நடிகர் தீனா நாங்கள் அனாதையாக இல்லாமல் இருப்பதற்கு விஜய் சாரை காரணம் என்று கூறியது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறியதாவது:-

நாங்கள் 700 பேர் ஜிம் பாய்ஸ் இருக்கோம். இருபது வருஷமா எங்களுக்கான சங்கம் ஒன்றை அமைத்து போய்க்கொண்டிருக்கிறது. அந்த 700 பேரை பெப்ஸி (FEFSI) அமைப்புடன் சேர்த்துக்க சொல்லி விஜய் அண்ணா, செல்வமணி சார் கிட்ட சொன்னது எங்களுக்கெல்லாம் நெகிழ்ச்சியா இருந்தது.

ஏன்னா எங்களுக்கு சண்டையின்போது ஏதேனும் அடிபட்டுசினா கேட்கக் கூட நாதி இல்லாம அனாதையா இருந்தோம். அப்படியிருந்த எங்கள விஜய்னா பெப்சில சேர்த்து வச்சு உதவி பண்ணியிருக்காரு. அவர் என் உயிர் உள்ள வரைக்கும் மறக்க மாட்டேன்”என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top