Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராட்சசனுடன் இணையும் தனுஷ்.. அதிரடியான கூட்டணியால் ஜெர்க்கான கோலிவுட்
Published on
தமிழ் திரையுலகிற்கு விஷ்ணு நடிப்பில் உருவான ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் முண்டாசுப்பட்டி.
அதன்பின் இவருடைய பிரம்மிப்பூட்டும் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திகில் படமான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் ரசிகர்களால் அதிகம் கவரப்பட்டார்.
தற்போது இவருடைய அடுத்த படத்தின் கதாநாயகனாக தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனவே தனுஷ், இயக்குனர் ராம்குமார் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் ஃபேன்டஸி திரைப்படம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2021 ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தொடங்கப் போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது.

dhanush-cinemapettai
எனவே இயக்குனர் ராம்குமார், தனுஷ் கூட்டணியில் அதிரடியான ஃபேன்டஸி திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
