சென்னை: நடிகர் தனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது.

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளராக இருந்து, வேல்ராஜ் இயக்குநராக மாறிய முதல் படம். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து வி.ஐ.பி-2ஆம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதற்கான கதை, வசனத்தை நடிகர் தனுஷே எழுதினார். படத்தை ரஜினியின் 2வது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் அனிருத் இசையமைத்திருந்த நிலையில், 2ஆம் பாகத்தில் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

 

மேலும் அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய வேடம் ஒன்றில் நடிகை கஜோல் நடித்துள்ளார். அவர் தமிழிற்கு 20 ஆண்டுகளுக்கு பின் வருவது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இணைந்து தயாரித்துள்ள வி.ஐ.பி-2 படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றை தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வரும் ஜூலை 28ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.