fbpx
Connect with us

அனிருத்தை கழட்டிவிட்டு, ஆஸ்கார் நாயகனுடன் முதல் முறையாக கைகோர்த்த பிரபலம்.. மாஸ்ஸான லேட்டஸ்ட் நியூஸ்!

anirudh-rahman

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அனிருத்தை கழட்டிவிட்டு, ஆஸ்கார் நாயகனுடன் முதல் முறையாக கைகோர்த்த பிரபலம்.. மாஸ்ஸான லேட்டஸ்ட் நியூஸ்!

தமிழ் சினிமாவில் சுள்ளானாக தோன்றி, தற்போது டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் கடும் போட்டியாளராக மாறியவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என சினிமா துறையையே கலக்கி வருகிறார்.

இவர் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார்.

ஆகையால் தற்போது தனுஷ் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமானின் இசையில் முதல் முறையாக பாடப்போகும் உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்  இசையமைப்பாளர் அனிருத் இசையில் தனுஷ் பாடிய பாடல்கள் அனைத்தும் இன்றுவரை இளைஞர்களின் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

அதேபோல் தற்போது ‘அட்ராங்கி ரே’ என்ற பாலிவுட் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். அந்தப் படத்தில்தான் தனுஷ், ஏ.ஆர். ரகுமான் இசையில் ஒரு பாடல் பாடப் போகிறார்.

மேலும் இந்த படத்தில் தனுஷ்  உடன் பாலிவுட்  பிரபலங்களான அக்ஷய் குமார்,  சாரா அலிகான் ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர்.

எனவே இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ஏ.ஆர். ரகுமானும்  தனுஷும் மாஸ்க்  உடன்  எடுக்கப்பட்ட புகைப்படமானது தற்போது வெளியாகியுள்ளது.

Actor-Dhanush-AR-Raghuvan-cinemapettai

Actor-Dhanush-AR-Raghuvan-cinemapettai

அதன் பின் தனுஷ்-ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் பக்கா மாசான பாடல் வெளியாகப் போகிறது என்று  அவர்களுடைய ரசிகர்கள் இந்த செய்தியை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Continue Reading
To Top