செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

என்ன தனுஷ் வாடை அடிக்குது.. மீண்டும் விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய சம்பவம்!

Dhanush: பக்கத்து வீட்டுல பாவாடை காணும்ன்னா கூட என்ன தான் சார் கேக்கறாங்கனு கருணாஸ் ஒரு காமெடியில் சொல்வாரு. அப்படி தான் சில விஷயங்கள் நடிகர் தனுஷ் வாழ்க்கையிலும் நடக்குது. அவர் பாட்டுக்கு சிவனேன்னு தன்னோட வேலையை பார்த்துட்டு இருந்தாலும் இணையதள வாசிகள் அவரை சும்மா விடுவதாய் இல்லை.

சமீபத்தில் நயன்தாரா ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டு, தன்னுடைய டாகுமெண்டரி படத்தின் விளமபரத்திற்கு தனுஷை ஊறுகாயாய் பயன்படுத்தி கொண்டார். சில மாதங்களுக்கு முன் பாடகி சுசித்ரா பல யூடியூப் சேனல்களுக்கும் தனுஷை பற்றி தாராளமாக பேட்டிகள் கொடுத்தார்.

என்ன தனுஷ் வாடை அடிக்குது

யார் என்ன வேணா பண்ணிட்டு போங்க, நா என் வேலைய பாக்குறேன்னு தனுஷ் ஒரு பக்கம் சைலன்ட் மோடில் இருக்கிறார். இந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்-சாய்ரா பானு தம்பதியினர் தங்களுடைய 29 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக நேற்று அறிவித்தனர்.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அதே நேரத்தில் இணையவாசிகள் சட்டென என்ன இங்க தனுஷ் வாடை அடிக்குதுன்னு புதிய புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். தனுஷை ஒரு சில ஆண்டுகளாக பல நட்சத்திரங்களின் விவாகரத்திற்கு காரணமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் தனுசுடன் சேருபவர்களின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் தான் முடியும் என்றும் நாடி பார்க்காமல் ஜோதிடம் சொல்லி கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்திற்கும் தனுஷ் தான் காரணம் என பரவலாக பேசப்பட்டது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில் தனுஷ் உடன் இணைந்து ராயன் படத்தில் பணியாற்றி இருந்தார். அதனால் தற்போது தனுஷின் விவாகரத்து செண்டிமெண்ட் ஜோசியத்தில் இசைப்புயலும் இணைந்துவிட்டார்.

- Advertisement -

Trending News