Connect with us

Cinemapettai

மீண்டும் அசுரத்தனமான கதையில் மிரட்ட வரும் தனுஷ்.. இணையதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

karnan-danush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் அசுரத்தனமான கதையில் மிரட்ட வரும் தனுஷ்.. இணையதளத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் தனுசை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த படம் டிஜிட்டல் உரிமையுடன் சேர்த்து 100 கோடியைத் தாண்டியதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.

இதன் பிறகு தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய நீண்ட வருடமாக கிடப்பில் கிடந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளிவந்தது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் அசுரன் அளவுக்கு சோபிக்கவில்லை.

இதனை தொடர்ந்து பட்டாஸ் திரைப்படம் பொங்கல் ரேசுக்கு ரெடியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து சில் புரோ என்ற பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. இதனிடையில் மீண்டும் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.

நெல்லை மண் வாச கதையுடன் உருவாகியுள்ள இந்த படத்தை பரியேறும்பெருமாள் புகழ் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top