சந்திரபாபுவின் பையோபிக்கில் நடிக்க போகும் அசுரத்தனமான நடிகர்.. தரமான செலக்சன்

இந்திய சினிமாவில் இப்போது பையோபிக் படங்கள் பயங்கர ட்ரெண்டாக உள்ளன. நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர்களின் வாழ்க்கை கதைகளை படமாக்கி வருகிறார்கள். சமீபத்தில் அறிவியலாளர் நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை நடிகர் மாதவன் எடுத்து வெற்றி கண்டார்.

தமிழில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பையோபிக்கை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி, நடிகை கங்கனா ராவத் நடித்திருந்தார். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை மகாநதி என்னும் பெயரில் படமாக்கினர்கள். இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

Also Read: நடிகர் சந்திரபாபு இறந்தபின் நிறைவேற்றப்பட்ட ஆசை.. நண்பனை விட்டுக்கொடுக்காத நட்பு

இந்த வரிசையில் பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை கதை படமாக இருக்கிறது. சந்திர பாபு தமிழ் திரையுலக நகைச்சுவை ஜாம்பவான்களில் மிக முக்கியமான ஒருவர். அப்போதைய முன்னணி கதாநாயகர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்து ராமன், ஜெய் ஷங்கர் ஆகியோர் படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர்.

அந்த நாட்களிலேயே சென்னை தமிழை சிறப்பாக பேசி நடிக்க கூடியவர் சந்திரபாபு. அனைவரையும் சிரிக்க வைத்த சந்திரபாபுவின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியானது இல்லை. இவருடைய திருமண வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பின்னாளில் எடுக்கப்பட்ட படம் தான் இயக்குனர் பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’. இதை பாக்யராஜே ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்.

Also Read: நடிகர் சந்திரபாபு என்ற நகைச்சுவை மன்னன்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சந்திரபாபுவின் பையோபிக் எடுக்க போவதாக கூறினார். மேலும் இந்த படத்தில் சந்திரபாபுவாக நடிகர் தனுஷை நடிக்க வைக்க ஆசைப்படுவதாகவும் கூறினார். தனுஷ் பேட்ட பட சூட்டிங் சமயத்திலேயே கார்த்திக் சுப்புராஜுடன் படம் பண்ண ஓகே சொல்லி விட்டதாகவும் கூறினார்.

சந்திரபாபுவின் வாழ்க்கை கதை ஏற்கனவே ‘கண்ணீரும் புன்னகையும்’ என்னும் பெயரில் புத்தகமாக வந்தது குறிப்பிடத்தக்கது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் பக்காவாக பொருந்தக் கூடிய நடிகர் தனுஷ் சந்திரபாபுவாக நடித்தால் அவர் சினிமா கேரியரில் மற்றுமொரு திருப்பமாக இருக்கும்.

Also Read: இந்த 2 படங்களின் தழுவல் தான் நானே வருவேன்.. இப்பவே வரும் நெகட்டிவ் ரிவ்யூ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்