Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூப்பர் பார்மில் தனுஷ்.. அடுத்தடுத்து வெளியாகும் பெரிய படங்கள்.. பரபரப்பை கிளப்பும் அப்டேட்
By
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் சமீபத்தில் வெளியான அசுரன் திரைப்படம் பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி தனுஷ் சினிமா வரலாற்றிலேயே அதிகமாக வசூலித்த படமாக மாறியது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்தார். இதனால் அந்தப் படமும் அடுத்த கட்ட ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
சென்னை திரும்பிய தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் பட்டாசு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக சினேகா மற்றும் மெஹ்ரீன் பிர்சாடா ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கெல்லாம் முன்பாக கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்த நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வந்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படம் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஆக.! தனுஷ் காட்டில் அடைமழை தான் என்று சொல்லுங்க.!
