Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட ரஜினி கெட்டப்புக்கு மாறிய தனுஷ்.. வைரலாகும் அசத்தல் புகைப்படம்

தற்போது பிஸியான நடிகர் என்றால் அது தனுஷ் தான். வரிசையாக அரை டஜன் படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் ஒரு படம் வெற்றி ஒரு படம் தோல்வி என கலந்து கொடுத்து வருகிறார்.
இருந்தும் இவர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது முன்னணி நாயகனாக உயர்த்தியது. ஆனால் அதன் பிறகு வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களிலும் இழுபறியில் இருந்து வெளியானதால் படம் தோல்வியை தழுவியது.
தற்போது தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு கர்ணன் என பெயரிடப்பட்டுள்ளதாக முன்னதாகவே சினிமா பேட்டையில் தெரிவித்து இருந்தோம்.
தற்போது அந்த படத்தின் சூட்டிங் மதுரையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்து வருகிறது. அதில் தனுஷ் இன்று பேட்ட படத்தில் ரஜினி பிளாஷ்பேக்கில் வரும் வெட்டருவா மீசையுடன் வந்த கெட்டப்பில் நடிக்க இருக்கிறார்.
அந்த புதிய கெட்டப் உடன் கூடிய போட்டோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

karnan-dhanush
