Connect with us

Cinemapettai

asuran-danush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வசூல் வேட்டையாடும் அசுரன்.. திரையிட்ட இடமெல்லாம் திருவிழா

கடந்த வாரம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அசுரன். இதற்கு முன் இவர்கள் இருவரும் இணைந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்கள் சொல்லி அடிக்கும் கில்லி போல பாக்ஸ் ஆபீஸில் அதகளம் செய்தன.

வெறும் கமர்ஷியலாக மட்டுமல்லாமல் கதை கருவிலும் கவனம் செலுத்தும் வெற்றிமாறனின் நுணுக்கம், நடிப்பின் நாயகன் தனுஷின் அட்டகாசமான நடிப்பினால் பெரும் வெற்றிகளைப் பெற்றன.

இந்தக் கூட்டணி மறுபடியும் இணைந்ததால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கு ஏற்றாற்போல் திரைக்கதையும் அமைந்துவிட்டதால் இவர்களின் ஹிட் கூட்டணி மாஸான கூட்டணியாக அமைந்து கடந்த வாரம் ரிலீசான அனைத்து படங்களின் வசூல் நிலவரங்களை மாற்றியமைத்து விட்டது.

திரையிட்ட மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து, உலகம் முழுவதும் சுமார் 15 முதல் 20 கோடி வரை வசூலை வாரி குவித்துள்ளது. தனுஷின் சினிமா வரலாற்றிலேயே இந்த படம் அவருக்கு ஒரு பெரிய மைல் கல்லாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

நல்ல கதை உண்மையான வெற்றிக்கு அடையாளம்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இத கண்டிப்பா படிங்க

To Top