Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் வெளியிட்ட திடீர் அறிக்கை.. சொன்னதை கேட்பார்களா ரசிகர்கள்?
தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் திரைப்படம் அக்டோபர்-4 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான கத்தரி பூவழகி பாடல் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு, வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சமீபத்தில் பேனர் விபத்தில் இறந்த சுபஸ்ரீ விவகாரம் தொடர்பாக அனைத்து முன்னணி நடிகர்களும் தங்களது ரசிகர்களிடம் கட்டவுட் மற்றும் பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல் நடிகர் தனுஷ், தனது அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றம் வாயிலாக, தனது ரசிகர்கள் யாரும் இனி கட் அவுட் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
இதனை அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்ற செயலாளர் ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அக் 4 ஆம் தேதி வெளியாக இருக்கும் அசுரன் திரைப்படத்திற்கு கட் அவுட்& பேனர் ஆகியவற்றை வைப்பதை தவிர்த்து ,உங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை
வழங்கி கொண்டாடுமாறு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #asuran @dhanushkraja pic.twitter.com/D5IEzkRfLR— B.RAJA (@B_RAJA_) September 24, 2019
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
