நடிகை ஸ்ரீதிவ்யா கடந்த 2010ம் ஆண்டில் தெலுங்கு இயக்குநர் ரவிபாபு இயக்கிய ’மனசார’ தெலுங்கு படம்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

அதன் பிறகு 2013ம் ஆண்டில் இயக்குநர் பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர்.

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தனது முதல் படத்தில் புதுமுக நடிகர்களோடோ அல்லது இளம் நடிகர்களோடோ இணைந்து நடிப்பார்கள். பின்பு அதையடுத்து கொஞ்சம் வளர்ந்த ஹீரோக்களுடன் இணைவார்கள். அதன்பின் தான் முன்னணி நடிகர்களோடு நடிப்பார்கள்.

ஆனால் ஸ்ரீவித்யா தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இவர் தமிழில் ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, ஈட்டி,காஸ்மோரா,மருது,பெங்களூர் நாட்கள், மாவீரன் கிட்டு, சங்கிலிபுங்கிலி கதவ தொற, உள்ளிட்ட பல படங்களில் நடித்து விட்டார்.

அம்மணிக்கு ஒரு ஆசை இருக்காம், இதுஎன்னவென்றால் விசாரித்தால் எல்லா நடிகர்களுடன் நடித்துவிட்டேன். எனக்கு பிடித்தமான நடிகர்கள் சூர்யா, தனுஷ், அவர்களுடன் ஒரு படம் நடித்தால் போதும் அவர்கள் என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாக அம்மணி தெரிவித்துள்ளார்