Connect with us

Cinemapettai

அவர் ஓகே சொன்னா போதும்.. ஒரு ஓரமா நடிக்க கூட தயார்.. தனுஷ் சொல்வது யாரை?

dhanush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அவர் ஓகே சொன்னா போதும்.. ஒரு ஓரமா நடிக்க கூட தயார்.. தனுஷ் சொல்வது யாரை?

தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடம் பிடித்து தனியாக ஒரு ரசிகர் வட்டங்களை உருவாக்கி கெத்தாக வலம் வருபவர் தனுஷ். நடிப்பு அசுரன் என பெயர் எடுத்தவர். இவர் சிறப்பாக நடிப்பதற்கு செல்வராகவன் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.

கடந்த வருடத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு திரைப்படமாக அமைந்தது அனைவரும் அறிந்ததே. கமர்சியல் படங்கள் மட்டும்தான் சாதிக்கும் என்ற முற்போக்கு சிந்தனையை உடைத்தெறிந்த திரைப்படம்.

இந்நிலையில் இப்பேர்பட்ட நடிகர், ஒரு நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சைடு கேரக்டரில் கூட நடிப்பேன் என பொதுமேடையில் கூறியது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அவர் என்று தானே கேட்கிறீர்கள்.

அவர் யாரும் இல்ல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். தமிழ் சினிமா வரலாற்றை உலக அளவில் பெருமைப்படுத்தியவர். 40 ஆண்டு காலம் தமிழ் சினிமாவை ஒற்றை ஆளாக தன் தோளில் சுமந்து தற்போது வரை வசூல் மன்னனாக இருக்கிறார். சமீபத்தில் வெளியான தர்பார் படமும் வசூலில் மிரட்டியுள்ளது.

இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் நடந்த விருது விழாவில் தலைவர் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் சைடு கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என கூறி தனது விசுவாசத்தை செதுக்கியுள்ளார். இது தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி ரஜினி ரசிகர்களிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top